பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் -தமிழக அரசு உத்தரவு
தற்போது நாடு முழுவதும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கக்கூடிய முக்கியமான உத்தரவுகள் என்னவென்றால், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் என்பது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது வரை இந்தியாவில் ஐந்து பேருக்கு இந்த வைரஸ் தொற்று என்பது பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் இந்த வகை வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பில், குறிப்பாக இந்த வகை வைரஸ் என்பது 2001 ஆம் ஆண்டிலிருந்து அடையாளம் காணப்பட்ட வைரஸாக கருதப்படுவதாகவும், இது புதிய வகை வைரஸாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேபோல வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த வகை வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், ஒருவருக்கு இருமல், தும்மல் உள்ளிட்டவைகள் வந்தால் வாய் மற்றும் மூக்கு உள்ளிட்டவைகளை மறைத்து, அதற்குப் பிறகு தும்மல் வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கூட்ட நெரிசல் இருக்கக்கூடிய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்திற்கு இருமல், தும்மல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்கள்.
குறிப்பாக ஆறு நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு உறுதியுடன் இந்த காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களுக்கு செல்லும் பொழுது முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே மூன்று பேருக்கு ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இருவருக்கு அதாவது சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.