29 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா சிறப்பு பொருளாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 6 வருடங்களாகியும் மூடப்பட்டுள்ளது!
வவுனியாவில் 2016ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார நிலையம் இது வரை திறக்கப்படவில்லை.
55 கடைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம், கடந்த 2018ஆம் ஆண்டு கட்டிடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அதை இதுவரை அதிகாரிகள் திறக்கவில்லை.
இந்நிலைமையால் வவுனியாவில் உள்ள மொத்த மரக்கறி நிலையம் மற்றும் ஏனைய வியாபார நிலையங்கள் ஏனைய இடங்களில் இயங்கி வருகின்றன.
கொரோனா வைரஸின் போது, இந்த வணிக வளாகத்தின் கட்டிடங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பிரிவு நிறுவப்பட்டது மற்றும் சில நாட்களுக்கு வடக்கிலிருந்து கொழும்புக்கு காய்கறிகளை பரிமாறும் மையமாகவும் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் தற்போது கட்டிட வளாகம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டங்களில் இந்த விசேட பொருளாதார நிலையத்தை திறந்து வைக்குமாறு வவுனியா தொழிற்சங்கம் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை கட்டிடத் தொகுதி திறக்கப்படவில்லை.