அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் தொடர்பான தீர்மானம் மீளாய்வு – ஹரினி அமரசூரிய.

“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளை தற்போது மீளாய்வு செய்து வருகின்றோம்.இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

எனவே, அந்தப் பாடசாலைகள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்து, எங்கள் திட்டத்தின்படி, 3 கிலோமீட்டர் எல்லைக்குள் அனைத்து குழந்தைகளும் செல்லக்கூடிய ஆரம்ப பாடசாலைகளை உருவாக்கவும், இதுபோன்று பல பாடசாலைகளை இணைத்து முழுமையான மேல்நிலை பாடசாலைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். மேலும், 80% – 90% வேலைகளை முடித்த பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.”

Leave A Reply

Your email address will not be published.