கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரும் உயிரிழப்பு.

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய நபரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று (07) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரினால் தெஹிவளை, வட்டரப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 36 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.