குடும்பத்துடன் ஐடி ஊழியர் தற்கொலை – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
குடும்பத்துடன் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரசேத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அனூப் குமார்- ராக்கி. இந்த தம்பதிக்குப் பிரியங்கா என்ற பெண் குழந்தை, பிரியங்க் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் அனூப் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் ஆலோசகராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த சூழலில் நேற்று காலை அனூப் குமார் வீட்டு வேலைக்காரர் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனையடுத்து அனூப் குமார் மற்றும் ராக்கி அவர்களுக்கு போன் செய்துள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அனூப் குமார் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அனூப் குமார் மற்றும் அவரது மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் இருவரும் தரையில் சடலமாகக் கிடந்தனர்.
இதனையடுத்து 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கு முன்னர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தது தெரியவந்தது.
மேலும் பிரேதப் பரிசோதனையின் அறிக்கை மற்றும் காவல் துறையின் முழு விசாரணைக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரிய வரும் எனக் காவல் துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டது.