மோடி, இந்த ஆண்டு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் – இந்திய தூதர் தெரிவிப்பு.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனைத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பரில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பை ஏற்று, இந்த விஜயத்திற்கு பொருத்தமான காலத்தைக் கண்டறிய தாம் செயற்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான உறவின் ஊடாக இலங்கையின் நிதி நிலைப்படுத்தல் முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும் எனவும் , இலங்கைக்கு இந்தியா கடனாக வழங்கிய 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான தொகை , மானியமாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.