ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு இனி கட்டாயக் குறைந்தபட்சத் தண்டனை இருக்காது.

சிங்கப்பூரில் முதல் முறையாக ஆபத்தான முறையில் அல்லது அலட்சியமாக வாகனத்தை ஓட்டுவோருக்கான கட்டாயக் குறைந்தபட்சத் தண்டனை நீக்கப்படும். ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துச்செய்யப்படும் காலமும் நீக்கப்படும். அதற்கான சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

சாலைப் போக்குவரத்து மசோதாவின்கீழ் வழக்குகளைப் பொறுத்துத் தகுந்த தண்டனைகளை நீதிமன்றங்கள் விதிக்கலாம். தற்போது ஆபத்தாக வாகனமோட்டும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் கட்டாயக் குறைந்தபட்சத் தண்டனை விதிக்கப்படுகிறது.

முதல் முறை குற்றம் புரிபவர்களுக்குத் தண்டனை உண்டு என்று உள்துறைத் துணையமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் (Muhammad Faishal Ibrahim) சொன்னார். ஆனால் அவை குற்றம் நடந்த சூழல், அதன் விளைவு, குற்றம் புரிந்தவரின் நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் பெரும்பாலான குற்றங்களுக்குக் குறைந்தபட்சத் தண்டனை கட்டாயமாக விதிக்கப்படுவதில்லை. முதல் முறை வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டுவோருக்கு இனி கட்டாயக் குறைந்தபட்சத் தண்டனை இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.