திபெத்தில் நிலநடுக்கம் – மாண்டோர் எண்ணிக்கை 95யை தாண்டியது.

திபெத்தின் (Tibet) ஷிகாட்சே (Shigatse) நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 95க்குக் கூடியுள்ளது.

130 பேர் காயமுற்றனர். இன்று காலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்தியாவின் சில பகுதிகளிலும் நேப்பாள தலைநகர் காட்மாண்டிலும் (Kathmandu) வலுவான அதிர்வுகள் உணரப்பட்டதாய்க் கூறப்படுகிறது. நிலநடுக்கத்துக்கு 3 மணி நேரத்திற்குப் பிறகு சுமார் 50 நில அதிர்வுகள் உணரப்பட்டன.

ஏறக்குறைய 1,500 பேர் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ராணுவ வீரர்கள் 200 பேர் உதவுவதாகவும் CCTV ஊடகம் சொன்னது.

Leave A Reply

Your email address will not be published.