இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவா் வி.நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்தது.

தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்தின் பதவிக் காலம் திங்கள்கிழமையுடன் (ஜன. 13) நிறைவடைகிறது. அவா் கடந்த 2022 ஜனவரி 14-ஆம் தேதியில் இருந்து இப்பொறுப்பை வகித்து வருகிறாா்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் ஜன. 14-ஆம் தேதி பொறுப்பேற்கிறாா். அவா் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பாா். இவா், தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்.

திருவனந்தபுரம், வலியமலையில் அமைந்த இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநரான வி.நாராயணன், கரக்பூா் ஐஐடி-யில் பட்டம் பெற்றவா்.

ஏறக்குறைய 40 ஆண்டுகால அனுபவத்துடன் ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ என்ஜின் தயாரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.