தனியார் பேருந்து சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும்போக்குவரத்து சோதனை நடவடிக்கைக்கு எதிராக தனியார் பேருந்து்சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக  தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் எல்லை மீறி பஸ்களை சோதனையிடுவதாகவும், தேவையற்ற முறைகளில் செயற்படுவதாகவும் இதனால் நாடளாவிய ரீதியில்வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனியார் பேருந்துசங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) அறிவித்திருந்தது.

இது தொடர்பில் தனியார் பேருந்து சங்கம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர்பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை (08) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது

கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாகதனியார் பேருந்து சங்கம் அறிவித்திருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.