தெலுங்கானாவில் பாலத்தின் மேல் இருந்து 31 நாய்களை தூக்கி வீசியதில் 20 நாய்கள் இறந்த அதிர்ச்சி சம்பவம்!

பாலத்தின் மேல் இருந்து 31 நாய்களை தூக்கி வீசியதில் 20 நாய்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலுங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட 30 நாய்களில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பு தொண்டர்கள் புகார் அளித்தனர். இந்த சம்பவம் ஜனவரி 4 ஆம் திகதி நடந்துள்ளது.

இந்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாய்களை வேறு இடத்தில் வைத்து கொன்று விட்டு பாலத்தில் இருந்து வீசப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், இறந்த 20 நாய்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் விலங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து, காயமடைந்த 11 நாய்கள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு நாகோலில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.