பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசாவை இந்தியா நீட்டித்தது.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) விசாவை இந்தியா நீட்டித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ஹசீனாவைத் திருப்பியனுப்ப வேண்டும் என பங்களாதேஷ வலியுறுத்தும் வேளையில் அவருடைய விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹசீனா இந்தியாவில் தங்கியிருக்க ஏதுவாக அவருடைய விசா நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவை கூறின.
சென்ற ஆண்டு பங்களாதேஷில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஹசீனா தற்போது இந்தியாவில் வசிக்கிறார்.