அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேர் கைது.

யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர்.

காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ததுடன் , அவர்களின் படகொன்றினையும், படகினுள் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகையும், கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.