ஜாக்குலின் – முத்துக்குமரன் இடையே காதலா.. பிக் பாஸ் வீட்டிற்குள் குண்டை தூக்கி போட்ட சாச்சனா.

பிக் பாஸ் 8 தற்போது பைனலை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. 95 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த வாரம் ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர்.

தற்போதுள்ள 8 போட்டியாளர்களுக்கு, வெளியேறிய மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ள எக்ஸ் போட்டியாளர்களுக்கும் இடையே தான் இந்த வார போட்டி நடந்து வருகிறது. வீட்டிற்குள் வந்தவர்கள், வெளியே நடக்கும் பல விஷயங்களை கூறினார்கள். அதில் விஜே விஷால் காதல் நாயகனாக உலா வந்தார் என கூற மனமுடைந்து போனார்.

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள்
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள்
ஜாக்குலின் – முத்துக்குமரன்

அதே போல் ஜாக்குலின் மற்றும் முத்துக்குமரன் இடையே காதல் போல் வெளியே பேசிக்கொள்கிறார்கள் என சாச்சனா கூற, இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் ஜாக்குலின் இடம் இருந்து முத்துக்குமரன் காப்பாற்றுவதாக நினைத்து, இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால், உங்கள் இருவரையும் காதலிக்க விடமாட்டேன் என சாச்சனா கூறுவது, இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை முத்து கண்டித்தார். ஆனாலும் அதனை சாச்சனா கேட்கவில்லை.

சாச்சனாவின் இந்த செயலில் வருத்தமடைந்த ஜாக்குலின், தீபக்கிடம் சென்று, “முத்து எனக்கு தம்பி மாதிரி, எனக்கும் அவனுக்கும் மூன்று வயது வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் எப்படி காதலிப்போம், சாச்சனாவிற்கு இது புரிய வேண்டாமா” என ஆதங்கத்துடன் பேசினார் ஜாக்குலின்

Leave A Reply

Your email address will not be published.