பாதுகாப்புக்கு ஆபத்தாகக் கருதப்படுபவோரைக் கண்டறிய சிங்கப்பூர் ஆயுதப் படையில் நடைமுறைகள் உள்ளன – தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு ஆபத்தாகக் கருதப்படுபவர்களைக் கண்டறிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ராணுவத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை என்று தற்காப்பு அமைச்சு சொன்னது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மூன்று சிங்கப்பூரர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சின் தகவல் வந்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் 44 வயது நுரிஷாம் பின் யூசோஃப் (Nurisham bin Yusoff), சிங்கப்பூர் ஆயுதப் படையில் தாம் கற்றுக்கொண்ட ஆயுதமேந்தும் திறன்கள் ஹமாஸின் ராணுவக் குழுவில் சேர்வதற்கு உதவக்கூடும் என்று கூறினார்.
குறிப்பாக, ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் ராணுவப் பிரிவில் சேர்வதற்கு அந்தப் பயிற்சி கைக்கொடுக்கும் என்று அவர் நம்பியதாகக் கூறப்பட்டது.
ராணுவச் சேவையாளர்கள் பயிற்சியில் கற்றுக்கொண்டவற்றைக் குற்றங்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் பயன்படுத்த எண்ணுவது கவலையளிப்பதாகத் தற்காப்பு அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.