கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்.
கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்.
கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஓன்று இன்றைய தினம்(10.01) வெள்ளிக்கிழமை மன்னார், மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலிமனோகரன் கலந்து கொண்டு ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பாக விளக்கங்களை அளித்தார்.
இதன் போது, கருத்துரைத்த அவர்,
“இலங்கையின் வரலாற்றினை எடுத்துப் பார்த்தால்,இங்கு வந்த வெளிநாட்டவர்கள் யாருமே இலங்கை தொடர்பில் குறை கூறியதில்லை.
இலங்கையை இந்து சமுத்திரத்தின் முத்து என்றும், சொர்க்கபுரி என்றும் கூறுவார்கள், தொலமியில் இருந்து இபன் பதூதா வரையில் காலனித்துவ காலத்தில் இலங்கைக்கு வந்த அனைவருமே இலங்கையில் உள்ள வளங்கள் மற்றும் விருந்தோம்பலைப் பற்றிப் பேசினார்கள். அவ்வாறான பெறுமதி் மிக்க இந்நாடு இப்போது வித்தியாசமான ஒரு திசையில் பயணிக்கறது. இது ஏன் இதை எவ்வாறு மீள உருவாக்குவது என்பது தான் எல்லோரது கேள்வியும்.
“நாம் அனைவரும் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப மாற்றங்களை நம்மிலிருந்து உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் நல்ல பழக்கவழக்கங்களை நம் வீட்டிலிருந்து, அலுவலகத்திலிருந்து
பணிபுரியும் இடங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், நம் நாட்டில் ஒரு கலாச்சாரமாகவே மாறிப்போன லஞ்சசம் மற்றும் ஊழலை ஒழிக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்”என்றார்.
குறித்த கலந்துரையாடலில்,மாவட்ட செயலகத்தின் பதவிநிலைஉத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகத்தின் பதவிநிலைஉத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், திணைக்களங்களின்பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டிருந்தனர்.