கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு அறைகள் தற்காலிகமாக மூடல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த வைத்தியசாலையின் இரண்டு நோயாளர் அறைகளுக்குத் தற்காலிகமாக நோயாளிகளை இணைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 34, 36 இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.