Delta விமானத்தில் இயந்திரக் கோளாறு : வெளியேறிய பயணிகள் (Video)
Delta Airlines விமானம் ஒன்றில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானத்தின் புறப்பாடு ரத்துச் செய்யப்பட்டது.
சறுக்குகள் வழியாகப் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். 4 பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதில் மூவருக்கு அங்கேயே சிகிச்சை வழங்கப்பட்டது.
விமானத்தில் 201 பயணிகளும் 7 சிப்பந்திகளும் இருந்தனர்.
விமானம் அட்லாண்டா (Atlanta) அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மினசோட்டாவில் (Minnesota) உள்ள Minneapolis-Saint Paul அனைத்துலக விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டியது.
இயந்திரத்தில் கோளாறு இருப்பதை அறிந்த பிறகு விமானி புறப்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டுப் பயணிகளை விமானத்திலிருந்து சறுக்குகள் வழியாக வெளியேற்றினார்.