பிரான்ஸில் இரு டிராம் வண்டிகள் மோதிக்கொண்டதில் பலருக்குக் காயம் (Video)
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) நகரில் இரு டிராம் வண்டிகள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 50 பேர் காயமுற்றனர் என்றும் எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்றும் The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.
130 தீயணைப்பாளர்களும் 50 அவசரக்கால மீட்பு வண்டிகளும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
டிராம் வண்டிகள் மோதியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என The Guardian செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
விபத்து ஏற்பட்டபோது ஒரு டிராம் வண்டி பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.