ரஷ்யாவின் கர்ஸ்க் (Kursk) வட்டாரத்தில் வட கொரிய வீரர்கள் இருவர் உக்ரேனிடம் பிடிபட்டுள்ளனர்.
மாஸ்கோவுக்காகச் சண்டையிட்டபோது அவர்கள் பிடிப்பட்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியிருந்தார்.
வட கொரிய வீரர்கள் உக்ரேனிடம் சிக்கியிருப்பதைத் தென் கொரிய தேசிய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவோ வடகொரியாவோ அது பற்றி ஏதும் சொல்லவில்லை.
வட கொரிய வீரர்களைப் பிடித்தது எளிதான செயல் அல்ல என்று திரு ஸெலென்ஸ்கி கூறினார்.
தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
பிடிபட்டவர்களில் ஒருவர் வேறொரு பெயரில் ரஷ்ய ராணுவ அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றவரிடம் எந்த ஆவணமும் இல்லை.
அவர்கள் பிடிபட்டது வடகொரியா, போரில் ஈடுபட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரங்களை வழங்குவதாக உக்ரேன் கூறுகிறது.
உக்ரேன் போரில் வடகொரிய வீரர்களின் செயல்பாட்டைக் கண்டறிய கீவ்வுடன் தொடர்ந்து ஒத்துழைக்க தென் கொரிய உளவுத்துறை உறுதியளித்துள்ளது.
ரஷ்யாவுக்கு உதவ 10,000க்கும் அதிகமான வீரர்களை பியோங்யாங் அனுப்பியதாக கீவ்வும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் குற்றஞ்சாட்டுகின்றன.