தௌலகல பள்ளி மாணவி கடத்தல்… வீடியோ காட்சிகளுடன்!
உயர்தர பயிற்சி (Tuition) வகுப்பில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த 19 வயது பள்ளி மாணவி ஒருவர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் கிடைத்துள்ளன.
தௌலகல பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் 19 வயது மகள் கடத்தப்பட்டுள்ளார். மாணவி கடத்தப்படும்போது அவளைக் காப்பாற்ற ஒரு இளைஞன் தன் உயிரைப் பணயம் வைத்து போராடுவது சிசிடிவி காட்சிகளில் தெளிவாகக் தெரிகின்றன, அந்த நேரத்தில் யாரும் அந்த இளைஞனுக்கு உதவ முன்வராத நிலையும் தெரிகிறது.
நேற்று முன்தினம் (11) காலை 7.15 மணியளவில், தனியார் உயர்தர வகுப்பில் கலந்து கொள்வதற்காக பள்ளிச் சீருடை அணிந்திருந்த மாணவி ஒருவர், தனது தோழியுடன் தவுலகல நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கருப்பு வேனில் வந்த ஒரு குழுவினரால் அவர் கடத்தப்பட்டுள்ளார். . அவளுடைய தந்தை ஒரு உள்ளூரில் ஒரு தொழிலதிபர்.
மாணவியைக் கடத்திச் சென்று வைத்திருக்கும் இளைஞன் ஆரம்பத்தில் 5 லட்சம் ரூபாயை கப்ப தொகையாகக் கோரியிருந்தார், ஆனால் பின்னர் அதை 3 லட்சம் ரூபாயாக குறைத்தார்.
பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வேனைக் கேட்டு, 200,000 ரூபாயை கணக்கில் வரவு வைக்குமாறு கோரினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை ரூ.50,000-ஐ சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளார்.
கடத்தலை நடத்தியவர் மாணவியின் மச்சினர் என தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராக்களில், மாணவி தனது பள்ளி சீருடையில் தனது தோழியுடன் வகுப்பிற்கு நடந்து செல்வது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அப்போது, வழியில் நின்ற வேனில் இருந்து இறங்கிய அவரது உறவினர், அவரை வலுக்கட்டாயமாக வேனில் இழுத்து போட்டுக் கொண்டு செல்கிறார்.
அந்த நேரத்தில், சிசிடிவி காட்சிகளில், வேறோர் இளைஞன் அவளைக் காப்பாற்ற போராடுவதையும், அந்த இளைஞன் சுமார் 500 மீட்டர் தூரம் வேனில் தொங்கிக் கொண்டு சென்றபோது சந்தேக நபர் அவரைத் தாக்கி தரையில் வீழ்த்துவதையும், எவரும் அவருக்கு உதவ முன்வராது இருப்பதையும் காணமுடிகிறது.
இருப்பினும், ஒரு பள்ளி ஆசிரியர் அருகிலிருந்த மோட்டார் சைக்கிளில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை வேனைத் துரத்திச் சென்ற போதும் , கட்டுகஸ்தோட்டை நகரில் அந்த வேன் போன திசையை தவறவிட்டுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் (11) பிற்பகல் பொலன்னறுவை நகருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் அந்த வேன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அந்த வாகனம் வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனம் என்றும், அதை 31 வயது நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்துள்ளார் என்றும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. வாடகை நிறுவனத்தால் வேனில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் வேனைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
மாணவி கடத்தப்பட்டபோது வேனை ஓட்டிச் சென்ற தவுலகல பகுதியைச் சேர்ந்த நபர், பொலன்னறுவையில் வேனை விட்டுவிட்டு வீடு திரும்பும் போது தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தலுக்கான காரணம்
19வயது மாணவி, சந்தேக நபரின் தாயாரின் சகோதரரின் மகள் என்றும், மகளை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், ஜப்பானில் சிறிது காலம் பணிபுரிந்த சந்தேக நபர், இளம் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசைப்பட்டு, மாணவியின் தந்தைக்கு பணம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று மாணவியின் தரப்பு கூறுகிறது. மாணவி கண்டுபிடிக்கப்பட்ட பின் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த விஷயங்கள் குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என போலீசார் கூறுகின்றனர்.
அந்த மாணவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை…
பொலன்னறுவை பகுதியில் மாணவியைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் செய்த அழைப்புகளுடன், இணைக்கப்பட்ட தொலைபேசி கோபுரங்கள் மூலம் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், தவுலகல மற்றும் கம்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.