நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாண பெண் தெரிவு.
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாண பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து நாடாளுமன்றுக்கு இலங்கையில் பிறந்த வனுஷி வால்டர்ஸ் என்ற 36 வயது பெண், உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து நாடாளுமன்றில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராகவும் இவர் உள்ளார்.
நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற அமைச்சருக்கான தேர்தலில் வெற்றிபெற்றதன் ஊடாக இலங்கையில் பிறந்த வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) என்ற 36 வயது பெண் நியூசிலாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பருக்கு எதிராக ஒரு குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இவர் தெரிவாகியுள்ளார்.
அந்தவகையில், பெசான்ட் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், இவர் மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.