நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம்
பகுதியில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டடுபிடிக்கப்பட்ட சம்பவம்
ஒன்று இன்றையதினம் (13) மாலை
இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த
11.01.2025 அன்று காணாமல் போயுள்ளார்.

பின்னர் அவரை தேடும் பணியில் உறவினர்கள்
ஈடுபட்ட நிலையிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்றையதினம்
குறித்த இளைஞனது வீட்டுகிணற்றில் சடலம் மிதந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல்
வழங்கப்பட்டதனை தொடர்ந்து சடலத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த பிலிப்குமார் டினோஜன் எனும் 28 வயதுடைய இளைஞரே
மரணமடைந்துள்ளார்.

குறித்த இளைஞனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.