சிங்கப்பூர் புளோக் ஒன்றின் 10ஆம் மாடி வீட்டுச் சன்னலில் நின்ற பெண் மீட்கப்பட்டார் (Video)
தெம்பனீஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் 10ஆவது மாடி வீட்டுச் சன்னலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை மீட்டது.
Instagram தளத்தில் sgfollowsall எனும் பக்கத்தில் சம்பவத்தைக் காட்டும் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் பெண் ஒருவர் வீட்டின் சன்னலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தது தெரிந்தது.
ஒரு கையால் சன்னலை அவர் இறுக்கிப் பிடித்திருந்தார்.
அவரைக் காப்பாற்ற குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் புளோக்கின் கீழ் மிதவைகளைத் தயார்செய்தனர்.
சம்பவம் குறித்து 8 World தற்காப்புப் படையிடம் கேட்டது.
இன்று காலை சுமார் 10.35 மணிக்கு தெம்பனீஸ் ஸ்டிரீட் 82 புளோக் 848-இல் ஏற்பட்ட சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகப் படை தெரிவித்தது.
அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததும் உடனே மீட்புப்பணியை முடுக்கிவிட்டனர்.
பிறகு அந்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அந்தப் பெண் சன்னலைத் துடைத்துக்கொண்டிருக்கும்போது தவறி வெளியே விழுந்ததாக நம்பப்படுகிறது.
அந்தப் பெண் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
https://www.instagram.com/reel/DEwG3ndBmVe/?utm_source=ig_embed