இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ஷ சிக்குவாரா?
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருக்கு நெருக்கமானவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சக்திவாய்ந்த தொழிலதிபர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு பரிவர்த்தனை தொடர்பாக ஆதாரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம் தொழிலதிபர் சாட்சியம் அளித்தவுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.