அடை மழையிலும் அட்டகாசமாக  இடம்பெற்ற தைப்பொங்கல்  கொண்டாட்டம்.!

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.01) உலகத் தமிழர்களால்  தைப் பொங்கல் பண்டிகை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்திலும், கொட்டும் மழையின் மத்தியில், மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள   இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது.

மேலும் வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையிலும், மக்கள்  பொங்கல் பண்டிகையை சிறப்பாகக்  கொண்டாடி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.