தெற்கு ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
தெற்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்ததாகவும், ஆனால் நேற்று அது வாபஸ் பெறப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இருப்பினும், கடலோரப் பகுதியின் சில பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் மியாசாகி நகரில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆனால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுனாமி அபாயம் நீங்கியிருந்தாலும், நிலநடுக்க அபாயம் இன்னும் இருப்பதாகவும், பாதுகாப்பாகவும் தயாராகவும் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உள்ளூர்வாசிகளுக்குத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.