அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார்.
பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவடைந்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடமும் 15 காளைகளை அடக்கி குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாமிடமும் 13 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
இந்த ஆண்டு தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பில், பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு அளிக்கப்படுகிறது.
இரண்டாம் பரிசு பெற்றவருக்கு இருசக்கர வாகனம் பரிசு அளிக்கப்படுகிறது.