அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்டார் மேஜர் ௭ம்.விக்ரர் பெர்ணான்டோ!

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக,
கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார், உயிலங்குளம் 542,பாதுகாப்புப் படைப்பிரிவினைச் சேர்ந்த மேஜர். M.விக்ரர் பெர்ணான்டோவிற்கு, பெருமை மிக்க மகா பரிசுத்த , மகா சங்க ரத்னர்களால் , வில்பத்துவ , ஸ்ரீ விஜயதிலக மஹா விகாரஸ்தானத்தினால் நேற்றைய தினம்(14.01)செவ்வாய்க்கிழமை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தந்திரிமலை களுவில மெஹேனியாராம விகாரையில் போதனா தங்குமிடம், மற்றும் சிறப்பு அபிமானங்கள் அமைத்து அர்ப்பணித்தமை, பல விகாரைகளில் போதனா இருப்பிடங்கள், தானசாலைகளைத் தன்னார்வப் பணி மூலம் அமைத்து வழங்கியமை ,முருங்கன் விகாரைக்கு , புத்தரின் சிலை மற்றும் புத்த பீடம் ஒன்று அமைத்து கொடுத்தமை, அனுராதபுரத்தில் 19 வீடுகளை அமைத்து வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கு வழங்கியமை. சிவுருகல விகாரையில் , சிவுருகல ஸ்தூபத்தை அமைத்து புத்தசாசனத்திற்காக அர்ப்பணித்தமை ஆகியவற்றை செய்த பொது காரியங்களை செய்தமை ஆகியவற்றுக்காக இக் கௌரவம் வழங்கப்பட்டது.

அத்தோடு இலங்கையில் உள்ள பெரிய யசோதரா ரஹத்கரணய சிலையை தந்திரிமலையில் அமைத்து அர்ப்பணித்தமை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவியமை, ,அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையைச் சேர்ந்த பாடசாலைகளில் தேவைகளை கண்டறிந்து தீர்வளித்தமை, குறிப்பாகப் பாடசாலைகளுக்கான நீர்த்தொட்டி அமைத்து, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தியமை போன்ற அர்ப்பணிப்புகள் பிரதேச மக்களிடையே மிகுந்த மதிப்பும் பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில் மேஜர் எம். விக்ரர் பெர்ணான்டோவிற்கு குறித்த விருதுகள், வில்பத்து ஸ்ரீ விஜய திலகாராமை. மகா விகாரை பீடாதிபதி,மகா விலத்தியே தேரர் மற்றும் முருங்கன் புராதன மகா விகாரை பீடாதிபதி. வல்பொல சரண தேரர் ஆகியோரினால், வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேரர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.   

Leave A Reply

Your email address will not be published.