தாக்குதலின் பின்னணியில் சரத் பொன்சேகா… – மஹிந்தவிடமிருந்து வந்த ஒரு அழைப்பு..(Video)
2009 ஆம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி நடந்த ரிவிர பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் குறித்து , பாதிக்கப்பட்ட உபாலி தென்னக்கோன் கூறுகையில், அப்போதைய இராணுவத் தளபதியின் தலையீட்டால் அது நடத்தப்பட்டதாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 ஆம் ஆண்டு தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
இணைய தள கலந்துரையாடலில் கலந்து கொண்ட நேர்காணலில் ,தன் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு அடையாள அணிவகுப்பில் தன்னைத் தாக்கிய நபரை, அடையாளம் காண முடிந்தது என அவர் கூறினார்.
இருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட விசாரணையைத் தடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதே சமயம் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மணி நேரம் தன்னை திட்டிய சம்பவத்தையும் தென்னகோன் நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் சில உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தொடங்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தான் உட்பட ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு நீதியை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பார் என தான் நம்புவதாகவும், ஆனால் அந்த நம்பிக்கைகள் இப்போது மங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.