அடர்ந்த புகைமூட்டம், குளிர்ந்த வானிலை – ரயில், விமானச் சேவைகளில் தாமதம்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அடர்ந்த புகைமூட்டம், குளிர்ந்த வானிலை காரணமாக ரயில், விமானச் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
அங்கு இரண்டாவது ஆக உயர்ந்த எச்சரிக்கை நிலையான ஆரஞ்சு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியின் பல பகுதிகளை அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
டில்லி விமான நிலையத்தில் பார்க்கக்கூடிய தொலைவு 0 முதல் 100 மீட்டர் வரை உள்ளதாக வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
வட இந்தியாவில் சுமார் 40 ரயில் சேவைகள் தாமதமடைந்தன.
தற்போது புதுடில்லியில் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸுக்குக் குறைந்துள்ளது.
CAT III போக்குவரத்து முறையைப் பயன்படுத்தாத விமானங்கள் தரையிறங்குவதில் சிரமத்தை எதிர்நோக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் X சமூக ஊடகத் தளத்தில் எச்சரித்தனர்.