3,600 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த , Facebook, Instagram, WhatsApp ஆகியவற்றை நடத்திவரும் Meta நிறுவனம் .
Meta நிறுவனம் அதன் 5 விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்கிறது.
அடுத்த மாதம் தொடங்கி 3,600 ஊழியர்கள் ஆட்குறைப்புச் செய்யப்படுவர்.
எதிர்பார்த்த அளவுக்கு வேலைசெய்யாத ஊழியர்களுக்குப் பதிலாகப் புதிய ஊழியர்களைச் சேர்க்கவிருப்பதாக Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்தார்.
2022, 2023 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனத்தில் பெரிய அளவில் ஆட்குறைப்பு இடம்பெறுகிறது.
Facebook, Instagram, WhatsApp ஆகியவற்றை நடத்திவரும் Meta நிறுவனம் பெரிய மாற்றங்களைச் செய்கிறது.
அடுத்த அதிபராகும் டோனல்ட் டிரம்ப்புடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள அது விரும்புகிறது.
Facebook, Instagram ஆகிய சமூக ஊடகங்களிலிருந்து தகவல்களைச் சரிபார்க்கும் நடைமுறையை Meta நிறுவனம் கடந்த வாரம் நீக்கியது.
அது பேச்சு சுதந்திரத்திற்கு வழிவிடும் என மார்க் ஸக்கர்பர்க் கூறினார்.
அண்மைக்காலமாக Meta நிறுவனம் டிரம்ப்புக்கு ஆதரவாக இருந்துவருகிறது.