காஸா உடன்படிக்கைக்கு ஹமாஸ் பச்சைக்கொடி.
காஸா போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துவிட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் புதன்கிழமையன்று (ஜனவரி 15) தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தையை நடத்திய கத்தார் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் முன்வைத்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக அந்த அதிகாரி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.