செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு
விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தலா 220 கிலோ எடையுள்ள இரு செயற்கைக்கோள்களை பரிசோதனை முயற்சியாக இணைக்கும் பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திரயான்-4 திட்டங்களுக்கு டாக்கிங் முறை முக்கியமானது என்பதால், அது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.