சந்தையில் Appleஐ பின்னுக்குத் தள்ளிய Vivo, Huawei.
Apple நிறுவனம் கடந்த ஆண்டு (2024) 3ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளது. சீனாவிற்கு அனுப்பப்படும் iPhoneகளின் எண்ணிக்கை 17 விழுக்காடு குறைந்திருப்பதாக ரய்ர்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதுவே Apple நிறுவனம் சீனச் சந்தையில் எதிர்நோக்கியுள்ள ஆகப் பெரிய வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் Vivo, Huawei ஆகிய உள்ளூர் நிறுவனங்களின் திறன்பேசிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு (2024) சீனாவில் விற்கப்பட்ட திறன்பேசிகளின் எண்ணிக்கை விழுக்காடு:
1. Vivo – 17 விழுக்காடு
2. Huawei – 16 விழுக்காடு
3. Apple – 15 விழுக்காடு
உயர்தர புதிய ரக திறன்பேசிகளின் அறிமுகம், அதிகரிக்கும் உள்ளூர் மடிக்கும் திறன்பேசிகளின் எண்ணிக்கை, புதிய தொழில்நுட்ப அறிமுகம் ஆகிய காரணங்களால் Vivo, Huawei நிறுவனங்களின் திறன்பேசிகள் மேலும் பிரபலமாகிவுள்ளன.
விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவைச் ஈடுக்கட்ட Apple ஜனவரி 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை iPhone 16 திறன்பேசிகளை சுமார் 68 டாலர் (93 வெள்ளி) விலைக் கழிவில் விற்பனை செய்தது.