ரயில் வேலைநிறுத்தம்..62 ரயில் பயணங்கள் பாதிப்பு!
இன்று இயக்க திட்டமிடப்பட்ட 62 ரயில் பயணங்கள் நிச்சயமற்றதாகிவிட்டன.
ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பில் செல்வதாலும், இரட்டைப் பணி மாற்றங்களில் ஈடுபடாததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அலுவலக ரயில்கள் மற்றும் குறுகிய தூர ரயில்கள் இன்று ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என்றும், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை ரயில்கள் மற்றும் இரவு அஞ்சல் ரயில்கள் பாதிக்கப்படலாம் என்றும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.