திவூலப்பிட்டி மாவட்ட மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது
திவூலபிட்டிய மாவட்ட மருத்துவமனையின் சிறு சேவை பொறுப்பாளருக்கு கோவிட் 19 இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால் , இன்று (18) முதல் தற்காலிகமாக திவூலப்பிட்டி மாவட்ட மருத்துவ மனை மூடப்பட்டிருப்பட்டதாக சுகாதார அலுவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
15 ஆம் தேதி, திவுலப்பிட்டி மாவட்ட மருத்துவமனையின் ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு பின்னர், சிறு சேவை பொறுப்பாளர் கோவிட் 19னால் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக பணியாற்றிய செவிலியர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்களில் 14 பேர் 18 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டதாக சுகாதார திணைக்கள மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சுமார் 10 மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.