பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி சாலை விபத்தில் உயிரிழப்பு!

பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். டான்ஸ் மாஸ்டரான இவர் ராகுல்டிக்கி என்ற யூட்யூப் சேனலை நடத்திவந்தார்.

இன்ஸ்டாவிலும் பிரபலம். ஏழை எளியோருக்கு எதாவது உதவிகள் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியை அழைத்து வருவதற்காக, மாமியார் வீட்டிற்கு ராகுல் சென்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற போது, கவுந்தபாடி அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் தலைக்கவசம் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.