ஜல்லிக்கட்டு போட்டி: ஒரே நாளில் ஏழு பேர் பலி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் ஜல்லிக்கட்டுப் போட்டியுடன் தொடர்புடைய வெவ்வேறு சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர்.
மேலும், 400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன்.
இவர்களில் பலர் ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்தவர்கள். சிவகங்கை மாவட்டம் சிராவயல் பகுதியைச் சேர்ந்த தனீஷ்ராஜா தன் காளையுடன் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார்.
அப்போது அவரது காளை திமிறிக்கொண்டு ஓடியதில், அருகிலிருந்த கிணற்றில் விழுந்துவிட்டது. காளையைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தனீஷ்ராஜா பலியானார்.