பிகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்

பிகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். இதுவரை பத்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாயமான 4 பேரை மீட்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மனேஷ் குமார் மீனா தெரிவித்தார்.

பலியானவர்களில் இருவர் பவன் குமார் (60) மற்றும் சுதிர் மண்டல் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.