நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன்!

நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு நிலவியது.
நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜெனிபர்(30) என்ற மகள் இருக்கிறார்.
ஜெனிபர் அதே தெருவைச் சேர்ந்த மரிய குமார்(36) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஜெனிபர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வேறு ஒருவரை அவர் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மரிய குமார் ஜெனிபரின் வீட்டிற்கு சென்று மாமனார் மற்றும் மாமியாருடன் தகராறு செய்துள்ளார்.
அதில் வாக்குவாதம் முற்றவே இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளி மரியகுமாரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.