காஸாவில் சண்டை நிறுத்தம் – 3 இஸ்ரேலியப் பிணையாளிகள், 90 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை!

காஸாவில் சண்டை நிறுத்தம் – 3 இஸ்ரேலியப் பிணையாளிகள், 90 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை

காஸாவில் சண்டை நிறுத்தத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை ஒட்டி 90 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 69 பேர் பெண்கள்; 21 பேர் பதின்ம வயது ஆடவர்கள்.

இதற்குமுன் 3 இஸ்ரேலியப் பெண் பிணையாளிகளை ஹமாஸ் விடுவித்தது.

மூவரும் டெல் அவிவ் (Tel Aviv) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நலம் சீராய் உள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

விடுவிக்கப்பட்ட பிணையாளிகளை வரவேற்க நூற்றுக்கணக்கான மக்கள் இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சின் வெளியே ஒன்றுதிரண்டனர். அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்தனர்.

பாலஸ்தீனர்களும் சாலைகளில் திரண்டு விடுவிக்கப்பட்டோரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆயினும் நிலைகுலைந்த அவர்களது வீடுகளைக் கண்டபோது மகிழ்ச்சி கவலையாக மாறியது.

விடுவிக்கப்படும் ஒவ்வோர் இஸ்ரேலியப் பிணையாளிக்கும்
30 பாலஸ்தீனக் கைதிகள் இஸ்ரேலியச் சிறைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் கூறியது.

Leave A Reply

Your email address will not be published.