அதிபர் டிரம்ப் – உடனடி நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக உத்தரவாதம்
அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் டோனல்ட் டிரம்ப் நாட்டில் உடனடியாகப் பல நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.
நாளை பதவியேற்கவிருக்கும் அவர் இன்று பெரிய அளவில் வெற்றிப் பேரணியை நடத்தியிருக்கிறார்.
முதலில் அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லையில் கள்ளக் குடியேறிகளின் ஆக்கிரமிப்பை முறியடிக்கப்போவதாகத் திரு டிரம்ப் கூறினார்.
நாளை முதல் மிக விரைவாகச் செயல்பட்டு,
நாடு எதிர்நோக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நெருக்கடியையும் தீர்க்கவிருப்பதாக அவர் உறுதியளித்தார்.
தேர்தல் பிரசார பாணியில் உரையாற்றிய 78 வயது திரு டிரம்ப் பதவியிலிருந்து விலகும் அதிபர் ஜோ பைடனைச் சாடினார்.
திரு டிரம்ப்புக்கு ஆதரவாகப் பல பிரமுகர்கள் பேரணிக்கு வந்திருந்தனர்.
நடிகர் ஜான் வொயிட் (Jon Voight), பாடகர் கிட் ராக் (Kid Rock), செல்வந்தர் இலோன் மஸ்க் (Elon Musk) அவர்களில் அடங்குவர்.