ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டி – காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஜோக்கோவிச்
நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) செக் குடியரசின் ஹிரி லஹேச்காவைத் (Jiri Lehecka) தோற்கடித்து ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
செட் விவரம்: 6-3 6-4 7-6(4)
அவர் நாளை மறுநாள் (21 ஜனவரி) காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸுடன் (Carlos Alcaraz) போட்டியிடவுள்ளார்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியப் பொதுவிருது போட்டியி்ல் வெற்றிகண்டால் ஜோக்கோவிச் அவரது 25ஆவது பொதுவிருதுப் பட்டத்தை வெல்வார்.