முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத் திருவிழா.
முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025 பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்ஸ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு – வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.
அந்தவகையில் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.
அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிலையில் சிறார்கள் முதல் பெரியோர்வரை இணைந்து இந்தப் பட்டம்விடும் திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையெங்கும் அழகிய வண்ணப்பட்டங்கள் வானை அலங்கரித்தன.