கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு – குற்றவாளிக்கு இன்று தண்டனை விதிக்கப்படும்!
இந்தியாவின் கொல்கத்தா நகரில் இளம் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு இன்று தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.
சஞ்சய் ராய் (Sanjay Roy) என்ற அந்தக் காவல்துறைத் தொண்டூழியரைக் குற்றவாளி என்று நீதிமன்றம் சென்ற சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையை அவர் எதிர்நோக்குகிறார்.
கொல்கத்தாவின் R G Kar கல்லூரி மருத்துவமனையில் சென்ற ஆகஸ்ட் மாதம் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குப்பின் கொல்லப்பட்டார்.
அவர் கடுமையான வன்முறையை எதிர்கொண்டதாகவும் அவ்வளவு கொடூரமான வன்முறை மிகவும் அரிது என்றும் புலனாய்வாளர்கள் கூறினர்.
அந்தச் சம்பவத்தால் மேற்கு வங்க மாநிலத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் மருத்துவர்கள் பல நாள்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.