35 பேரைக் காரால் மோதிக்கொன்ற சீன பிரஜைக்கு மரணதண்டனை.

சீனாவில் 35 பேரைக் காரால் மோதிக்கொன்ற 62 வயது பான் வெய்சீயுவிற்கு (Fan Weiqiu) இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஆண்டு (2024) நவம்பர் 11ஆம் தேதி சூஹாய்
(Zhuhai) நகரில் நடந்தது.

2014ஆம் ஆண்டு முதல் சீனாவில் நடந்த குற்றங்களில் மிக மோசமானதாகக் கருதப்படும் அந்தச் சம்பவத்தில் 45 பேர் காயமுற்றனர்.

விவாகரத்து, குடும்பப் பிரச்சினைகள், தனிப்பட்ட மனவேதனை ஆகியவற்றின் காரணமாக பான் அவ்வாறு நடந்துகொண்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

மனிதாபிமானமின்றிப் பொதுமக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தியதால் பானிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.