திருகோணமலையில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகள் எமக்கு அதிகம்…… இந்தியாவுடன் இணைந்து சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து உலகிற்கு எண்ணெய் வழங்குவோம்..- ஜனாதிபதி
திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கு எண்ணெய் விநியோகிக்க அதிகமானவை என ஜனாதிபதி அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகளில் எண்ணெய் தொட்டி வளாகங்கள் இருப்பதாகவும், இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் எண்ணெய் சேமிப்பு வசதிகள் இருப்பதாகவும் கூறிய அவர், திருகோணமலை பகுதிக்கு இவ்வளவு எண்ணெய் தொட்டிகள் தேவையில்லை என்றும் கூறினார்.
திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளைக் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்திய நிறுவனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையை உலகச் சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக மாற்ற வேண்டும் என்றும், அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டி, எண்ணெயை தொட்டிகளில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.