2020ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 1,500 பேருக்கு பொது மன்னிப்பு.

அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுள்ள டோனல்ட் டிரம்ப், நாடாளுமன்றக் கலவரத்தில் தொடர்புடைய ஏறத்தாழ 1,500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார். அந்தத் தோல்வியை ஏற்காத அவரது ஆதரவாளர்கள் இரண்டு மாதங்கள் கழித்து 2021 ஜனவரி 6ஆம் தேதி ‘கேப்பிட்டல்’ எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஈடுபட்டனர். டிரம்ப்பின் தோல்வியை நாடாளுமன்றம் அறிவிப்பதைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினருடன் அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திங்கட்கிழமை (ஜனவரி 20) பொது மன்னிப்பை அறிவித்த அதிபர் டிரம்ப், “இன்றிரவே அவர்கள் வெளியே வருவார்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார்.
சிறையில் உள்ளோரின் ஆறு பிரதிவாதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிபரின் கருத்தை உறுதிசெய்யும் வகையில், சில கைதிகள் இரவோடு இரவாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை பேச்சாளர் கூறினார்.