நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கிப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக போலீசார் விசாரணையைத் தொடங்கியதோடு, இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு அனுராதபுரம் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.